Saturday, August 2, 2008

சிறுநீர் வழி பகுதியில் ஏற்படும் நோய்கள

சிறுநீர் வழி பகுதியில் ஏற்படும் நோய்கள் பற்றி நான் படித்த விவரங்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிறுநீரகங்களில் ஏற்படும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை பற்றிய ஓர் அறிமுகமாகவும், வருமுன் காப்போம் என்ற எண்ணத்தினால், இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

சிறுநீர்வழி பகுதியில் நான்கு உறுப்புகள் உள்ளன.

1. சிறுநீரகங்கள் (கிட்னி)

2. சிறுநீர்க்குழாய்கள் (யூரிட்டர்)

3. சிறுநீர்ப்பை (பிளேடர்)

4. சிறுநீர்ப்புறவழி (யூர்ரித்துரு)

பொதுவாகச் சொல்வாதனால் சிறுநீரகங்கள் சிறுநீரைச் சுரக்கச் செய்து சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு அனுப்பி, அதை நிரப்பச் செய்த பிறகு, சிறுநீர்ப்புறவழி வழியாக சிறுநீர் வெளியேறுகிறது. இயல்புக்கு மாறாக செயல்படும் நிலையில் ஆபத்தான் விளைவுகளை உடனே உண்டாக்கும்.

சிறுநீரகங்கள் (கிட்னி)

சிறுநீரகங்கள் (கிட்னி) மனிதனுக்கு இரண்டு உண்டு. வயிற்றின் உறுப்புகளுக்குப் பின்புறம் மேற்பகுதியில் தண்டுவடத்திற்கு இருபுறமும் ஒன்று வீதம் உள்ளது. அது அவரை விதை வடிவத்தில் காணப்படும். வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்தை விட சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும், 10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 86.5 செ.மீ. அகலமும் கொண்டது. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது.

சிறுநீரகம் இரண்டு செயல்களைச் செய்கிறது. ஒன்று இரத்தத்திலிருக்கும் கழிவுகளைத் தூய்மைப்படுதி நீக்குகிறது. இரண்டாவதாக உடலிலுள்ள நீரையும், உப்பையும் ஒழுங்குப் படுத்துகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ஒரு லிட்டருக்கு மேல் இரத்தம் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. இதில் சிறு பகுதி மட்டுமே தூய்மைப்படுதப்படுகிறது.

Sunday, July 27, 2008

மந்தை புத்தி

நான் படித்த கலைக்கதிர் அறிவியல் மாத இதழ் செப்டம்பர் 2007-ல் படித்த முக்கியமான, தற்போது சோதனையில் உள்ள ஒரு செயலை பற்றியது இக்கட்டுரை- மந்தை புத்தி .

தலைவர், பொறுப்பாளர், வழிகாட்டி என்று யாருமில்லை. படை உண்டு தளபதியில்லை வேலையாட்கள் உண்டு ஆனால் மேலாளர் இல்லை. இருப்பினும் அரைமில்லியன் பூச்சிகள் யாருடைய தலைமையும் வழி காட்டுதலும் கட்டளையும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்படுகின்றன. எப்படி? என்பது தான் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவு உங்களுக்காக சில பகுதிகள்........

"தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தர்ல் தெரியும் என்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார்.

"எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப் போராடி 12,000 வகை எறும்பு சிற்றினங்கள் வளர்த்துக் கொண்ட அறிவு தான் "மந்தை புத்தி". மந்த புத்தியல்ல. தனி ஒரு எறும்பினால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு மாபெரும் சாதனையை ஒரு எறும்புக் கூட்டம் எளிதில் சாரித்துவிடும். தீனி இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதுடன் அதற்கான மிக சீக்கிரமான குறுக்கு வழியைக் கண்டு பிடிப்பதிலும், கூட்டத்தைப் பிரித்து வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் நிர்வாகத் திறமையிலும் பக்கத்து புற்றிலிருக்கும் கூட்டத்துடன் வேட்டைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் ராஜ தந்திரத்திலும், தனி ஒரு எறும்பு 'மண்டு' ஆனால் கூட்டமாக செயல்படும்போது அதன் வேகம், விவேகம் இரண்டுமே அசாத்தியம். இதை கோர்டான் அவர்கள் 'ஸ்வார்ம் இன்டேல்லிஜென்ஸ்' மந்தை புத்தி என்றழைக்கிறார்.

தனியாக ஏதும் செய்ய திறமையில்லாத பூச்சிகளும் பறவைகளும் கூட்டமாக இருக்கும்போது படுசுட்டியாக இருப்பது எப்படி? எங்கிருந்து அந்த அறிவு பிறக்கிறது. பல முட்டாள்கள் ஒன்று கூடி பெரிய சாதனை எதையும் படைக்க முடியாது. ஆயிரம் பூச்சியங்களைக் (0) கூட்டினால் கிடைப்பதும் பூச்சியம் தான் அப்படியிருக்க மந்தையிலிருது புத்திசாலித்தனம் எப்படி உருவாகமுடியும்?

எல்லா உறுப்பினர்களும் இணைந்து வழங்கும் சிறு சிறு செய்கைகள் ஒன்றுகூடிடும் போது அது மாபெரும் சாதனையாகி விடுகிறது.

அடுத்து கட்டவேண்டிய புதிய தேன் கூட்டினை எந்த இடத்தில் கட்டினால் நல்லது என்று இடம் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்தை தேனீக்கள் எப்படி அடைகின்றன? ஆயிரக்கணக்கான நெத்திலி மீன்கள் ஒரே மனதாக திடீரென்று மின்னல் வேகத்தில் திசைமாறி கூட்டம் கலைந்து போகாமல் ஒரு பெரிய வெள்ளி பூதம் திரும்புவது போல திரும்புகின்றனவே! என்ன நடக்கிறது என்பதை தனித்தனியாக அவை அறியமலிருந்த போதிலும் கூட்டத்தின் ஒருமித்த வெற்றிக்கு அவை அடிகோலுகின்றன! உயிரியலில் மாபெரும் சிந்தனையாளர்களும் சாதனைகளைப் படைத்தவர்களும் கூட மந்தை அறிவைக் கண்டுவியந்து போகிறார்கள். அண்மைக் கால ஆய்வுகள் மூலம் மந்தை அறிவின் சூட்சுமங்கள் வெளிப்பட ஆரம்பித்திருகின்றன.

எறும்புக்கூட்டமாகட்டும், தேனீக்களின் கூட்டமாகட்டும் இரண்டிலும் தலைவர், பொறுப்பாளர், வழிகாட்டி என்று யாருமில்லை. படை உண்டு தளபதியில்லை வேலையாட்கள் உண்டு ஆனால் மேலாளர் இல்லை. இருப்பினும் அரைமில்லியன் பூச்சிகள் யாருடைய தலைமையும் வழி காட்டுதலும் கட்டளையும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்படுகின்றன.

மந்தை புத்தி/ Swarm Intelligence

நான் படித்த கலைக்கதிர் அறிவியல் மாத இதழ் செப்டம்பர் 2007-ல் படித்த முக்கியமான, தற்போது சோதனையில் உள்ள ஒரு செயலை பற்றியது இக்கட்டுரை- மந்தை புத்தி (Swarm Intelligence).

தலைவர், பொறுப்பாளர், வழிகாட்டி என்று யாருமில்லை. படை உண்டு தளபதியில்லை வேலையாட்கள் உண்டு ஆனால் மேலாளர் இல்லை. இருப்பினும் அரைமில்லியன் பூச்சிகள் யாருடைய தலைமையும் வழி காட்டுதலும் கட்டளையும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்படுகின்றன. எப்படி? என்பது தான் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவு உங்களுக்காக சில பகுதிகள்........

"தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தர்ல் தெரியும் என்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார்.

"எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப் போராடி 12,000 வகை எறும்பு சிற்றினங்கள் வளர்த்துக் கொண்ட அறிவு தான் "மந்தை புத்தி". மந்த புத்தியல்ல. தனி ஒரு எறும்பினால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு மாபெரும் சாதனையை ஒரு எறும்புக் கூட்டம் எளிதில் சாரித்துவிடும். தீனி இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதுடன் அதற்கான மிக சீக்கிரமான குறுக்கு வழியைக் கண்டு பிடிப்பதிலும், கூட்டத்தைப் பிரித்து வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் நிர்வாகத் திறமையிலும் பக்கத்து புற்றிலிருக்கும் கூட்டத்துடன் வேட்டைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் ராஜ தந்திரத்திலும், தனி ஒரு எறும்பு 'மண்டு' ஆனால் கூட்டமாக செயல்படும்போது அதன் வேகம், விவேகம் இரண்டுமே அசாத்தியம். இதை கோர்டான் அவர்கள் 'ஸ்வார்ம் இன்டேல்லிஜென்ஸ்' (Swarm Intelligence) மந்தை புத்தி என்றழைக்கிறார்.