Wednesday, September 8, 2010

உணவே மருந்து

உணவே மருந்து

அம்மை நோய் பரவும் நேரத்தில், குழந்தைகளை பாதிக்கமால் தடுக்க தாழம்பூ சர்பத் 2 தேக்கரண்டி எடுத்து 15 மி.லி. தண்ணீரில் கலந்து ஐந்து நாளுக்குக் கொடுங்கள்.


மூல நோய்க்கு மிகச் சிறந்த மருந்துணவு ரோஜாப்பூ குல்கந்து.  இது கடைகளில் கிடைக்கிறது.  இதனை வாங்கி வைத்துக் கொண்டு காலையும் இரவும் அல்லது இரவு படுக்கைக்குப் போகும் முன்னராவது ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.  நாமே தயாரிக்கும் முறை
ரோஸ் நிறத்தில் உள்ள ரோஜா இதழ்களைத் தனியா எடுத்து அதில் புழு, பூச்சி இல்லாமல் சுத்தம் ‌செய்து அதன் அளவிற்கு மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வாயகன்ற பாட்டில் ஒன்றில் போட்டு அதன் அளவிற்குத் தேன் கலந்து கிளறிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.  மூல நோய் வராமல் பார்த்துக் கொள்வது, வந்துவிட்ட மூல நோயை நீக்குவதும் நீங்கள் உண்ணும் உணவி‌ல் தான் உள்ளது.

காலையில் எழுந்தவுடன் அடுக்குத் தும்மல் போடுகிறவர்கள் பலர், அவர்களுக்காக ஒரு டீ,
சுத்தம் செய்த புதினா இலை ஒரு பிடி, துளசி இலை 1 பிடி, இரண்டையும் ஒன்று சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப்பாகக் குறுகும் படிக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை சேர்த்தோ அல்லது தனித்தோ சாப்பிடலாம்.

சாதாரணமாக டீ கடையில் டீ சாப்பிடுவர்களுக்கு டீத்தூளில் என்னவெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.  அதனால் கலப்பட டீயைத் தவிருங்கள்.  அதற்கு பதிலாக சுக்கு, மல்லி காபி, கருப்பட்டிக் காபி, வல்லாரைடீ,  ஆகியவற்றை சாப்பிடலாம்.

உணவே மருந்து

உடல் நலம் பேணுவது பற்றி நான் புத்தகங்களில் படித்த சில விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஆண்களுக்கு அந்தப் பிரச்சினையா?
பாதம் அல்வா, கசகசா அல்வா, முந்திரி அல்வா போன்றவை விந்தணுக்களை அதிகரிக்க உதவும் துணை உணவுகள்.

வெங்காயத்தை 30 கிராம் எடுத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலக்கி குடிக்க தாது பு‌ஷ்டி உண்டாகும்.


ஆப்பிள் பழத்தின் உள்ளே உள்ள விதைகளை இனித் தூக்கி எறியாதீர்கள்.  அதைப் பாலில் கலந்து குடிக்க ஆண்மைப் பெருக்கு உண்டாகும்.

பச்சை வேர்க்கடலையை நல்லெண்ணெயில் ஊற வைத்து தினமும் 5 கடலைகள் வீதம் சாயங்காலத்தில் தின்று வர ஆண்-பெண் சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும்.

முட்டை மஞ்சள் கரு ஒரு பங்கு, வெங்காயச்சாறு, தேன் வகைக்கு அரைப் பங்கு சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்துத் தண்ணீர் சுண்டியவுடன் எடுத்து ஆறவிட்டுக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இந்திரியம் அதிகமாகும்.