Thursday, March 8, 2012

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் -அத்திமரம்





அத்திமரம்

மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.இந்த கிரகத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால்தான், வெள்ளி கிரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிறந்தது. இந்த நாள் அன்று முஸ்லீம்கள் விசேஷ தொழுகை நடத்துவார்கள். கிறிஸ்தவர்களுக்கு குட் ஃபிரைடே என்கிற புனித வெள்ளிக்கிழமை விரதம் இருந்து விசேஷ பூஜைகளும் செய்வார்கள்.

இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன. மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.

யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

மருத்துவ குணம்; அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.

இலை: அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

பட்டை: அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.

பழம்: நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.

டாக்டர் ஹகீம் எஸ்.அக்பர் கவுஸர்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள்-அரச மரம்

அரச மரம்



மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.

அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.

தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.

இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.

வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.

உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.

மருத்துவ குணங்கள்

இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.

இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.

ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

மரப்பட்டை: இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.

பட்டைச்சாறு: இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.

"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்