| தமிழாின் உலோக அறிவியல் -நன்றி தினமணி | |
Saturday, April 18, 2015
Sunday, March 22, 2015
உங்கள் சிகிச்சை, உங்கள் கையில்!
உங்கள் சிகிச்சை, உங்கள் கையில்!
By
-சாருகேசி
சென்னை அடையாறு
வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையின் டேக்-வி.ஹெச்.எஸ். டயாபடிக் மையத்தில் புகழ்
பெற்ற மருத்துவர் டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி, சீனாவிலிருந்து
வந்திருக்கும் ஹோங்க்சி ஸியோவை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
""இவர் முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள முன்னாள் வங்கி
அதிகாரி. எம்.பி.ஏ. பட்டதாரி. ஒரு நாவலும் எழுதி சீன சமுதாயத்தினரிடையே
விற்பனையில் அது சக்கைப் போடு போடுகிறது. இப்போது ஸியோ இங்கே வந்திருப்பது
மாற்று மருத்துவம் பற்றியும் அதன் பலனையும் எடுத்துச் சொல்லி
அறிமுகப்படுத்தத்தான்'' என்றார். முன்பே இரு முறை சென்னைக்கு
வந்திருக்கிறாராம் ஸியோ. சீனாவின் ஹூபே மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அந்தப் பகுதி முழுக்க மலைப் பிரதேசமாம். அங்கே பாரம்பரிய சீன சிகிச்சை முறைகளைக் கையாளுபவர்கள் நிறைய இருக்கிறார்கள் .
நாம் ஸியோவைச் சந்திக்கும்போது அவருடன் பயிற்சிகளைச்
செய்து காண்பிக்க பிங், எல்லென் மற்றும் டோங்லி என மூன்று சீன
உதவியாளர்களும் இருந்தார்கள். அவருடன் பேசும் முன்பு ஹாங்காங்கிலிருந்து
மும்பைக்குக் குடிபெயர்ந்துவிட்ட மராத்தி பிஸினஸ்மேன் என்று தம்மை
அறிமுகப்படுத்திக்கொண்டார் பராக் சாமெல்.
""எனக்கு ஹாங்காங்கில் பல கப்பல்களை மேற்பார்வையிட
வேண்டிய பணி. ஒரு நாள் வலது கண்ணில் ரெடினாவுக்கு ரத்தம் கொண்டு செல்லும்
ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண் முழுக்கச் சிவந்து ரத்தம் கொட்டத்
தொடங்கியது. என்னவெல்லாமோ வைத்தியம் செய்து பார்த்தேன். 12 வருடங்கள்
பாதிப் பார்வையுடன் கஷ்டப்பட்டேன். ஒரு நாள் ஸியோவின் அறிமுகம்
கிடைத்தது. அவர் பைதா-லாஜின் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி என் கண்ணைக்
குணப்படுத்திவிட்டார். க்ரேனியல் நரம்புதான் பார்வைக்கு உதவுகிறது
என்றார். அதுதான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். மாய வித்தை போல்
இருந்தது. அவரிடம் அந்த சிகிச்சை முறையைக் கற்றுக்கொண்டேன். அதிலிருந்து
நான் மும்பைக்குக் குடி பெயர்ந்து பைதா-லாஜின் ஆலோசகராகவும்,
பயிற்சியாளராகவும் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகிறேன்'' என்றபோது ஸியோ
மெல்லப் புன்னகை புந்தார்.
""இதோ பாருங்கள், என் சொந்த அனுபவம்தான் என்னை இந்தச்
சிகிச்சைக்கு மாற்றியது. தாயார் இதய நோயாளி. அதிக ரத்த அழுத்தக்காரர்.
சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளானவர். அவரே 30 வருடங்களாக ஆங்கில மருத்துவம்
செய்யும் மருத்துவர். அம்மா, நீயே ஒரு டாக்டர். உனக்கு இத்தனை நோய்கள்
இருக்கையில் நீயே உன்னைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா என்று கேட்டேன்.
அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு பைதா-லாஜின் முறையில் சிகிச்சை
ஆரம்பித்தேன். முழுதும் குணமாகி மகிழ்ச்சி அடைந்தார்'' என்றார் ஹோங்க்சி
ஸியோ.
இன்னொரு பெண்மணியின் கதையைக் கேளுங்கள். பக்கவாதம்
வந்தோடு மட்டுமல்ல. நடக்க முடியாது. நினைவு இழந்து படுத்திருந்தார்.
கண்கள் இரண்டும் ரத்தம்
சேர்ந்த மாதிரி சிவந்து இருந்தன. நான் அவரைப் பார்த்து
பைதா-லாஜின் (Paida lajin) முறையைக் கையாண்ட போது, 15 நிமிடத்தில் விழித்துக் கொண்டார்
அப்புறம் ஏழே நாள்தான் சிகிச்சை கொடுத்தேன். வீட்டுக்கு நடந்தே
போய்விட்டார்'' என்றார் ஸியோ. பைதா-லாஜின் சிகிச்சை முறை என்றால் என்ன?
""ஸ்லாப்பிங் அன்ட் ஸ்ட்ரெச்சிங் - அதாவது அடித்தல் மற்றும் நீட்டல் (அடித்தல் என்றால் தட்டுதல், ஓங்கித் தட்டுதல்)
நம் உடம்பில் இதயம் துடிப்பதை மட்டும்தான் நாம்
அறிகிறோம். உடம்பின் முக்கியமான பகுதிகள் அத்தனையும் துடிக்கும். அந்தத்
துடிப்பை, வைப்ரேஷனை நாம் கேட்க முடியும். அந்த ஓசைகள் எல்லாம்
ஒத்திசைந்து செயல்படும்போது உடல் சீராக இருக்கிறது. ஒரு பகுதி சரியாக
இயங்கவில்லை என்றாலும் நோய் தாக்குகிறது. அதனால் மருந்துகள் சாப்பிடச்
சொல்கிறார் மருத்துவர். மருந்துகள் எல்லாம் கெமிக்கல்கள். அதாவது
ரசாயனங்கள். விஷங்கள். பக்கவிளைவுகள் ஏற்படுத்துபவை. உடலுக்கு வெளியே
இருந்து எதையும் உடலுக்குள் செலுத்தாதீர்கள். அக்குபங்க்சர், அக்குபிரஷர்,
டாய்-சி, யோகா இவற்றைக் கொண்டே உங்கள் உடலின் சகல நோய்களையும் சீராக்க
முடியும்'' என்கிறார் ஸியோ. மூலிகை மருந்துகள் உபயோகிப்பதை இவர்
ஆதரிக்கிறார். சீன மருத்துவத்தைப் பொறுத்தவரை, சீன மருத்துவ நூல் யெல்லோ
எம்பரர்ஸ் கானன் ஆப் இன்டர்னல் மெடிசின் அவர்களுக்கு பைபிள் மாதிரி.
""பொருளாதாரம் படித்து, எம்பிஏ வாங்கிவிட்டு, வங்கியில்
இன்வெஸ்ட்மென்ட் பாங்கராகச் இருந்து சம்பாதித்துவிட்டு, வாழ்க்கையை நான்
அனுபவிக்கவில்லை என்றால் அப்புறம் வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.
சீன கலாசாரம் பற்றி யோசித்தேன். பீஜிங்கில் ஒலிம்பிக்ஸ் நடக்கும் முன்பு
சீன பாரம்பரியம், கலாசாரம் பற்றி தொடக்க விழாவில் என் குழு ஓர் அறிமுகம்
செய்தது. ஒலிம்பிக்ஸின்போது இதை உலகம் முழுக்க வியந்து பார்த்த போது அதன்
தாக்கத்தை உணர்ந்தேன். அப்போதுதான் சீன மருத்துவத்தின் தலைசிறந்த
மருத்துவர்களை நான் சந்திக்க முடிந்தது. அவர்களிடமிருந்து அக்குபஞ்சர்,
அக்குபிரஷர், போன் செட்டிங், ஊசியின்-கத்தியின் நுட்பம், பைதா-லாஜின் முறை
எல்லாம் கற்றுக்கொண்டேன். நாம்தான் நம் ஆரோக்கியத்தின் எசமானர்கள்''
என்கிறார் ஸியோ.
இவர் முதலில் எழுதிய நூல் "ஜர்னி டு க்யூர்' - மற்றும்
"பைதா-லாஜின் ஸ்லாப் ஹீலிங்'. இவர் இப்போது உலகம் முழுக்கச் சொற்பொழிவுகள்
செய்யக் கிளம்பிவிட்டார்.
சந்தேக பிராணிகளிடமும், சவால்காரர்களிடமும் இவர்
கேட்கும் முதல் கேள்வி: ""நீங்கள் பைதா-லாஜின் உங்கள் அளவில் பயிற்சி
செய்து பார்த்திருக்கிறீர்களா? செய்து பார்த்துவிட்டுத் தோற்றுப் போனால்
வந்து சொல்லுங்கள்'' என்பது இவர் வேண்டுகோள். பைதா முறையை ஒரு தாவோ
சன்னியாசியிடமிருந்தும், லாஜின் முறையை ஒரு
சீன-மருத்துவ நிபுணரிடமிருந்தும் கற்றுக்கொண்டாராம்.
இவர் அகுபங்க்சர் கற்றுக்கொண்டது ஒரு என்ஜினீயரிடமிருந்து. அக்குபிரஷரை
ஒரு மீனவரிடமிருந்து கற்றுக் கொண்டாராம் கை, முழங்கை, முழங்கால் மற்றும்
பாதம் இவைதான் நம் உடம்பில் முக்கியமான இணைப்புகள். அடைப்புகள் இருந்தால்
இந்த இடங்களில் ஒரு தட்டுத் தட்டினால் போதும் வலி போய்விடும். நிறைய
அடைப்புகள் இருந்தால் நிறைய தடவை தட்ட வேண்டும். (பிறத்தியாரை
அடித்தால்தான் திரும்ப அடி வாங்க வேண்டும்.
நோய் குணமாகுமென்றால் நம்மை நாமே அடித்துக் கொண்டால்
என்ன தப்பு) எந்தப் பக்க விளைவுகளும் கிடையாது. உடல் பருமனைக்கூட
பைதா-லாஜின் முறையில் குணப்படுத்த முடியும் என்கிறார் ஸியோ. டயபடீஸ்,
முழங்கால் வலி, இடுப்பு-முதுகு வலி எதையும் தம்மால் பைதா-லாஜின் முறையில்
குணமாக்க முடியும் என்கிறார்.
நம்மைக் குணப்படுத்த வெளியேயிருந்து ஆட்கள் வரத்
தேவையில்லை என்பது இவர் வாதம். நவீன மருத்துவத்தை விட இந்த இயற்கை
மருத்துவம் எத்தனையோ சக்தி வாய்ந்தது என்கிறார்.
45 வயதான ஒரு பெண்மணி படுத்த படுக்கையாக இருந்தாராம்.
நாள் பூரா ஒரே அழுகைதான். 14 ஸ்ட்ரெச்சஸ் பயிற்சிகள், 15 ஸ்லாப்-கள்
அதாவது அடிகள்! எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாராம். 85 சதவிகித குணம்
கிடைத்ததாம். ஒவ்வொரு நோயையும் அதைத் தாம் குணப்படுத்திய முறையையும் ஸியோ
விவரிக்கும் முறை சுவாரசியமானது.
பேட்டி முடிந்து வெளியே வந்ததும், டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி கூறினார்.
"" ஸியோ மகாத்மா காந்தி மீது மிகுந்த மரியாதை
வைத்திருக்கிறார். அவரே அதைச் சொன்னார். அப்புறம் அவர் கடைப்பிடித்த
உண்ணாவிரதக் கொள்கையை வெகுவாக ஆதரிக்கிறார். அது உடலை நலமாக வைத்திருக்க
உதவுகிறது என்கிறார்'' டாக்டர் சி.வி.கே. மணிபால் மருத்துவப் பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தரும், மாற்று மருத்துவ ஆர்வலருமான டாக்டர் பி.எம்.
ஹெக்டே ஸியோவின் ஆதரவாளர்.
நன்றி தினமணி 22.03.15
| |
Saturday, November 8, 2014
ஆவுடையாா் கோவில்
ஆவுடையாா் கோவில் தமிழகத்தில் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. மிக அற்புதமான கோவில், தமிழா்களின் கலை, அறிவியல், சிற்ப திறன் மற்றும் ஓவிய திறமைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு இக்கோவில் ஆகும்.
இக்கோவிலை பற்றி சொல்லுவதை விட நோில் சென்று பாா்த்தால் தான் அதன் அற்புதம் தொிய வரும் என்பது என் கருத்து.
சிறப்பு
1) மற்ற கோவில் போல் இங்கு பூசைகள் நடைபெறுவதில்லை. இங்கு தனி முறை பின்பற்ற படுகிறது.
2) பக்த்தனான மாணிக்கவாசகருக்கு இங்கு முதல் பூசை நடைபெறுகிறது.
3) சிற்பங்கள் யாவும் இதுபோல் மேற்கொள்ள முடியாது என சத்தியமிட்டு கூறலாம்.
4) பழைய கால ஓவிங்கள்
5) குதிரை சாமி
6) குறவன், குறத்தி சிற்பங்கள்
7) கற்கள், தகடுபோல் வளைந்து செதுக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு
8) கோவிலுக்குள் உள்ள கிணறு
Thursday, March 8, 2012
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் -அத்திமரம்
அத்திமரம்
இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன. மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.
யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
மருத்துவ குணம்; அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இலை: அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.
பட்டை: அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.
பழம்: நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.
நோய் தீர்க்கும் ராசி மரங்கள்-அரச மரம்
அரச மரம்
மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.
அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.
தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.
தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.
இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.
வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.
உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.
மருத்துவ குணங்கள்
இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.
இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.
ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.
மரப்பட்டை: இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.
பட்டைச்சாறு: இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.
"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
Saturday, November 6, 2010
மேட்டூர் அணைக்கு 74-வது பிறந்த நாள்!
நன்றி ராஜாராம் குமார்
அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு
அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு

சிந்திப்போம், விரைந்து செயல்படுவோம்
மண்ணைக் கெடுத்தது நம்முடைய ஆடம்பரம் தான்.
ஏ.சி. மெஷின் இல்லாமல் யாராலும் வாழ முடியவில்லை. பராவாயில்லை. ஒரு ஏ.சி. மெஷின் வைத்திரு°நதால் ஒரு பூவரச மரத்தையும் வையுங்கள். அரச மர மனங்கள் தான் மேம்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஆளசியும் நித்திய கல்யாணியும் 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.
எனவே, மழை ஈர்ப்பு மையம் அமைப்பதில் அக்கறையை காட்டுங்கள் என்கிறார் அவர்.
http://www.agriculturetheaxisoftheworld.com/2010/04/alias.html
மரங்களை நாம் இழந்துவிட்டோம் எனில், நாளைய உலகம் படும் துயரத்திற்கு அளவே இல்லை என படித்த ஞாபகம்.
Monday, October 4, 2010
இதயம்
மனம் என்பது இதயமா? மூளையா? என்றால் மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு இதயம்.
இதய வலுவிற்குச் சில மருத்துவக் குறிப்புகள்
அன்னாசிப் பழத்தை மேல் தோல் சீவிக் கறுக்குவாட்டில் வட்டங்களாய் நறுக்கி அதன் மேல் சீனி துா வி ஒரு பாத்திரத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் வைத்திருங்கள். இதனை நீரிழிவு நோய் இல்லாதவர்கள் காலையில் மட்டும் பருகிவர இதயம் பலமாகும்.
மருதமரங்கள் உள்ள சாலையில் அந்தக் காற்றில் நடந்தாலே மாரடைப்பு வராது என்பார்கள்.
உபவாசம்
மனிதனுக்கு எப்படி உணவு தேவையோ அதே போல் உண்ணா நோன்பும் தேவை.
பல மருத்துவா்களால் கொடுக்கப்பட்ட பல மருந்துகளால் குணமடையாத நோய்கள் உண்ணாநோன்பினால் குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உண்மையான பசி எடுக்க தொடங்கிவிட்டால் உடலில் தீய பொருள்கள் நீங்கிவிட்டதாகவும் உடல் நல்ல நிலையை அடைந்விட்டதாகவும் கருதி நோன்பை முடிக்க வேண்டும்.
Wednesday, September 8, 2010
உணவே மருந்து
உணவே மருந்து
மூல நோய்க்கு மிகச் சிறந்த மருந்துணவு ரோஜாப்பூ குல்கந்து. இது கடைகளில் கிடைக்கிறது. இதனை வாங்கி வைத்துக் கொண்டு காலையும் இரவும் அல்லது இரவு படுக்கைக்குப் போகும் முன்னராவது ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். நாமே தயாரிக்கும் முறை
ரோஸ் நிறத்தில் உள்ள ரோஜா இதழ்களைத் தனியா எடுத்து அதில் புழு, பூச்சி இல்லாமல் சுத்தம் செய்து அதன் அளவிற்கு மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வாயகன்ற பாட்டில் ஒன்றில் போட்டு அதன் அளவிற்குத் தேன் கலந்து கிளறிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். மூல நோய் வராமல் பார்த்துக் கொள்வது, வந்துவிட்ட மூல நோயை நீக்குவதும் நீங்கள் உண்ணும் உணவில் தான் உள்ளது.
காலையில் எழுந்தவுடன் அடுக்குத் தும்மல் போடுகிறவர்கள் பலர், அவர்களுக்காக ஒரு டீ,
சுத்தம் செய்த புதினா இலை ஒரு பிடி, துளசி இலை 1 பிடி, இரண்டையும் ஒன்று சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப்பாகக் குறுகும் படிக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை சேர்த்தோ அல்லது தனித்தோ சாப்பிடலாம்.
சாதாரணமாக டீ கடையில் டீ சாப்பிடுவர்களுக்கு டீத்தூளில் என்னவெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் கலப்பட டீயைத் தவிருங்கள். அதற்கு பதிலாக சுக்கு, மல்லி காபி, கருப்பட்டிக் காபி, வல்லாரைடீ, ஆகியவற்றை சாப்பிடலாம்.
உணவே மருந்து
ஆண்களுக்கு அந்தப் பிரச்சினையா?
பாதம் அல்வா, கசகசா அல்வா, முந்திரி அல்வா போன்றவை விந்தணுக்களை அதிகரிக்க உதவும் துணை உணவுகள்.
வெங்காயத்தை 30 கிராம் எடுத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலக்கி குடிக்க தாது புஷ்டி உண்டாகும்.
ஆப்பிள் பழத்தின் உள்ளே உள்ள விதைகளை இனித் தூக்கி எறியாதீர்கள். அதைப் பாலில் கலந்து குடிக்க ஆண்மைப் பெருக்கு உண்டாகும்.
பச்சை வேர்க்கடலையை நல்லெண்ணெயில் ஊற வைத்து தினமும் 5 கடலைகள் வீதம் சாயங்காலத்தில் தின்று வர ஆண்-பெண் சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும்.
முட்டை மஞ்சள் கரு ஒரு பங்கு, வெங்காயச்சாறு, தேன் வகைக்கு அரைப் பங்கு சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்துத் தண்ணீர் சுண்டியவுடன் எடுத்து ஆறவிட்டுக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இந்திரியம் அதிகமாகும்.
Sunday, April 4, 2010
மின்சார பற்றாக்குறை
உலகம் முழுவதும் மாற்று மின் உற்பத்தி பற்றி அதிக அளவு நடைமுறை படுத்தி வரும் நிலையில் நாம் இன்னும் அதை பற்றி நினைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை.
அன்டை நகரமான பெங்களுரில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.
நம் சென்னை நகரில் இத்திட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை, நடைமுறைப்படுத்த யோசிப்பதும் இல்லை, ஆனால் நாள்தோரும் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்டி, ஏ.சி. இவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
குறைந்தபட்சம் சோலார் முறையில் இயங்கும் தண்ணீர் கொதிக்க வைக்கும் கருவி (வாட்டர் ஈடர்) யாவது பயன்படுத்த அரசு தகுந்த வழிவகை செய்யலாம் என்பது என் கருத்து.
இந்த இணையத்தளத்தில் நமக்கு தேவையான விவரங்கள் மற்றும் சோலார் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
http://www.solkar.in/
Friday, November 27, 2009
அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்

அமெக்டாலா Amygdala:
அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.




மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.
இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அமிக்டலா தான்.
கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ்ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அவேர்னஸ்.
Saturday, November 21, 2009
முடி வளர சித்தமருத்துவம்
முடி உதிர்வதை தடுக்க
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
இளநரை கருப்பாக:
முடி கருப்பாக:
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முடி வளர்வதற்கு:
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
புழுவெட்டு மறைய:
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?
திரிபலா சூரணத்துடன் அதி மதுரமும் பொடித்துச் சேர்த்து ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது. இதிலுள்ள ஒரு சிறுகுறை தலைக்குக் குளித்தவுடன் இந்தச் சாயம் நீங்கிவிடும். தலைக்கு நல்லது என்பதால் இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.
இளநரைக்கு முக்கியமான காரணம், உடலில் பித்த தோஷத்தின் இயற்கைக் காரியம் குன்றுவதும், கெடுவதும்தான். தலைமுடியின் நரை நீங்க அதற்குத் தகுந்த தைலங்களைத் தலையில் தேய்ப்பது மட்டும் முற்றிலும் போதுமானதல்ல. இக்காலத்தில் பூசப்படும் ஹேர் டை, முடிக்குக் கெடுதலை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் செயற்கைச் சாயம் பூசுவது கெடுதல். மேலுக்குத் தகுந்த தைலங்கள் பூசிக் கொண்டு உள்ளுக்கும் இதுபோன்ற ரசாயனம் சேவிப்பதே நன்மை தரும்.
விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சியவனப்ராசம் லேஹ்யம், நாரசிம்ஹ ரசாயனம், குமார்யாஸவம் லோஹ பஸ்மம் போன்ற உள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட மிகவும் நல்லது.
Sunday, July 12, 2009
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
ரங்கராஜன், சென்னை.
நன்றாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பதுபோல எளிதில் செரிக்காத எண்ணெய்ப் பசை, குளிர்ச்சியான வீர்யம் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட நீர்த்தோற்றத்தில் உள்ள குடிநீர் வகைகள், எள்ளுடன் கலந்து பக்குவம் செய்யப்பட்ட இறைச்சி மாவினாலும் வெல்லத்தினாலும் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசித்தீயைச் சமப்படுத்த வேண்டும்.
அந்த வகையில் பால் பாயசம், பயத்தம் பருப்பு, நெய் இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த சாதம், நெய்யில் பக்குவம் செய்த தின்பண்டங்கள், நிலையாக நிற்கும் தண்ணீரில் வாழும் மீன் போன்ற பிராணிகளுடைய இறைச்சிகள், கொழுத்த செம்மறியாட்டின் மாமிசம் முதலியவற்றையும் மிகுதியான பசித்தீயைத் தணிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
1 டம்ளர் (சுமார் 250 கிராம்) பச்சரிசியில், 6 டம்ளர் தண்ணீர் விட்டு, சாதம் வெந்தவுடன் வடிகட்டி, அந்தக் கஞ்சியில், 5 கிராம் தேன் மெழுகு கலந்து உணவாகப் பருகலாம்.
1 டம்ளர் கோதுமையை வறுத்து மாவரைத்து நெய் கலந்து, சுமார் 4 - 5 டம்ளர் தண்ணீர் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி மதிய உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகப் பருக மிக நல்லது.
அரை டம்ளர் எள்ளு, அரை டம்ளர் உளுந்து முதலியவற்றை நன்றாக அரைத்துச் சுடுநீர் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாக்கிப் பக்குவம் செய்து உட்கொள்ளச் செய்தால் வீறு கொண்ட பசித்தீ மென்மையடையும்.
எண்ணெய்ப் பசையுள்ள மாமிச சூப்பைப் பருகுவது, நெய்யில் தேன் மெழுகு கலந்து குளிர்ந்த நீரும் கலந்து பருகுதல், கோதுமை மாவை நெய்யும் அல்லது பாலும் கலந்து உண்பது முதலியன நல்லது.
நெய், மாமிசத்திலுள்ள எண்ணெய்ப் பகுதி, எலும்புக்குள்ளிருக்கும் மஜ்ஜை இம்மூன்று வகை எண்ணெய்களையும் கோதுமை மாவுடன் கலந்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட, பசித்தீ அடங்கும். இதைச் சாப்பிட்ட பிறகு, பகலில் படுத்துத் தூங்குவது நல்லது.
இவ்வாறு கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் குறைந்துபோன கபம் வளரும். சீற்றமாயிருந்த பித்தமும் தணியும். வாதம் இயற்கை நிலையை அடையும். சடராக்கினி எனும் பசித்தீ சமநிலையை அடையும். தாதுக்கள் இயற்கைநிலையில் இருக்கும். சமநிலையிலுள்ள அக்கினி உணவைச் சரியாகப் பக்குவம் செய்து உடல் வளர்ச்சி ஆயுள் வலிமை இவற்றை வளர்க்கிறது.
மிருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், அமிருத ப்ராசம் கிருதம், ப்ருகத்சாகலாதிகிருதம், சங்கபஸ்மம், ஹிங்குல பஸ்மம், அப்ரக பஸ்மம், விதார்தியாதி லேஹ்யம், திகார்ஷாதி கஷாயம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயைச் சாந்தப்படுத்தும் வீர்யம் கொண்டவை. உங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகி, எது தங்களுக்குப் பொருந்துமோ அதை அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டு உபாதையிலிருந்து விடுபடலாம்.





























