Wednesday, September 8, 2010

உணவே மருந்து

உடல் நலம் பேணுவது பற்றி நான் புத்தகங்களில் படித்த சில விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஆண்களுக்கு அந்தப் பிரச்சினையா?
பாதம் அல்வா, கசகசா அல்வா, முந்திரி அல்வா போன்றவை விந்தணுக்களை அதிகரிக்க உதவும் துணை உணவுகள்.

வெங்காயத்தை 30 கிராம் எடுத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலக்கி குடிக்க தாது பு‌ஷ்டி உண்டாகும்.


ஆப்பிள் பழத்தின் உள்ளே உள்ள விதைகளை இனித் தூக்கி எறியாதீர்கள்.  அதைப் பாலில் கலந்து குடிக்க ஆண்மைப் பெருக்கு உண்டாகும்.

பச்சை வேர்க்கடலையை நல்லெண்ணெயில் ஊற வைத்து தினமும் 5 கடலைகள் வீதம் சாயங்காலத்தில் தின்று வர ஆண்-பெண் சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும்.

முட்டை மஞ்சள் கரு ஒரு பங்கு, வெங்காயச்சாறு, தேன் வகைக்கு அரைப் பங்கு சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்துத் தண்ணீர் சுண்டியவுடன் எடுத்து ஆறவிட்டுக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இந்திரியம் அதிகமாகும். 

Sunday, April 4, 2010

மின்சார பற்றாக்குறை

மார்ச் மாதம்  முதல் நமக்கு வரவு=செலவு பற்றாக்குறை என்றால், கூட மின்பற்றாக்குறையும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.


உலகம் முழுவதும் மாற்று  மின் உற்பத்தி பற்றி அதிக அளவு நடைமுறை படுத்தி வரும் நிலையில் நாம் இன்னும் அதை பற்றி நினைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை.


அன்டை நகரமான பெங்களுரில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.


நம் சென்னை நகரில் இத்திட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை, நடைமுறைப்படுத்த யோசிப்பதும் இல்லை, ஆனால் நாள்தோரும் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்டி, ஏ.சி. இவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


குறைந்தபட்சம் சோலார் முறையில் இயங்கும் தண்ணீர்  கொதிக்க வைக்கும் கருவி (வாட்டர் ஈடர்) யாவது பயன்படுத்த அரசு தகுந்த வழிவகை செய்யலாம் என்பது என் கருத்து.
இந்த இணையத்தளத்தில் நமக்கு தேவையான விவரங்கள் மற்றும் சோலார் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.  பயனுள்ளதாக இருக்கும் எ‌ன நினைக்கிறேன். 
http://www.solkar.in/

Friday, November 27, 2009

அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்



அமெக்டாலா Amygdala:

அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.

மூளை யின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம் பருப்பு அளவேயுள்ள உறுப்பு. இது தோற்றத்துக்கு பாதாம் பருப்பினை போல் இருப்பதால் ‌ பாதாம் பருப்பி‌ன் கிரேக்கப் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.













நியோகார்டெக்ஸ் தான் அன்பு பாசம், காதல் போன்ற உணர்ச்சிகளின் தலைக்காவேரி என்று சொல்லலாம். நம்முடைய அத்தனை வளர்ச்சிகளுக்கும் இன்றைய விபரீதச் சிந்தனைகளுக்கும் இவர்தான் காரணம். ஆனால் அமிக்டலா , நியோகார்டெக்ஸ் முன்னரே விலங்குகளின் தலைக்குள் வந்துவிட்ட சீனியர்.


அமிக்டலா நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர்

நடக்கும் நம்பவங்களை வைத்து, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்பதையெல்லாம் மனம் தனக்குத் தெரிந்த விதம் புரிந்து கொண்டு, உள்ளே போட்டுக்கொள்கிறது. பின்பு, அதை ஒட்டியே மற்ற செயல்பாடுகளை நடத்துகிறது. வேண்டியவர் வேண்டாதவர்கள் என்கிற எண்ணம் உருவாவது இப்படித்தான் .

மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ‌ ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.

இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அ‌மிக்டலா தான்.

கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ‌்‌ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸ‌ு க்கு போகும் போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்க்கு தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய் அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.


சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
மேலும், தன்னைக் குறித்த மிகத் துல்லியமான மதிப்பீடு (Accurate Self Assessment)
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அ‌வேர்னஸ்.

Saturday, November 21, 2009

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்



இப்போது பரவலாக இருக்கும் பிரச்னை இளநரை. இதனால் பலரும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஆனால் அவை கெமிக்கல் டை என்பதால் பல கெடுதல்கள் ஏற்படுகின்றன. இயற்கையான முறையில் முடி கருப்பாக வளர என்ன செய்ய வேண்டும். இயற்கை ஹேர் டை எப்படித் தயாரிப்பது?கலைமுருகன்,மயிலாடுதுறை.

திரிபலா சூரணத்துடன் அதி மதுரமும் பொடித்துச் சேர்த்து ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது. இதிலுள்ள ஒரு சிறுகுறை தலைக்குக் குளித்தவுடன் இந்தச் சாயம் நீங்கிவிடும். தலைக்கு நல்லது என்பதால் இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.

இளநரைக்கு முக்கியமான காரணம், உடலில் பித்த தோஷத்தின் இயற்கைக் காரியம் குன்றுவதும், கெடுவதும்தான். தலைமுடியின் நரை நீங்க அதற்குத் தகுந்த தைலங்களைத் தலையில் தேய்ப்பது மட்டும் முற்றிலும் போதுமானதல்ல. இக்காலத்தில் பூசப்படும் ஹேர் டை, முடிக்குக் கெடுதலை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் செயற்கைச் சாயம் பூசுவது கெடுதல். மேலுக்குத் தகுந்த தைலங்கள் பூசிக் கொண்டு உள்ளுக்கும் இதுபோன்ற ரசாயனம் சேவிப்பதே நன்மை தரும்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சியவனப்ராசம் லேஹ்யம், நாரசிம்ஹ ரசாயனம், குமார்யாஸவம் லோஹ பஸ்மம் போன்ற உள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட மிகவும் நல்லது.

Sunday, July 12, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


நான் சர்வசாதாரணமாக 8 முதல் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். அதுபோலவே 8 - 10 சப்பாத்திகள், பூரி, தோசை என்றெல்லாம் சாப்பிட்டாலும் அவை அனைத்தும் விரைவில் ஜீரணமாகி, மறுபடியும் பசி எடுத்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? அதிகப் பசியினால் உடல் சோர்ந்து, வாய் வரண்டு போகிறது. இந்த உபாதை தீர ஆயுர்வேத மருந்துகளும், என்ன உணவு வகைகளும் சாப்பிட வேண்டும்?

ரங்கராஜன், சென்னை.

உடலில் இயற்கையாக இருப்பதைவிட கபம் குறையும் போது பித்தம் சீற்றமடைந்து பசித்தீயின் அருகில் தங்கும். வாதத்துடன் சேர்ந்து தனக்கு உரியதான இயற்கைச் சூட்டினால் சீரணப்பையில் உள்ள நெருப்பிற்கு வலிமையைக் கொடுக்கும். இவ்வாறு பித்தத்தின் சூட்டினாலும் வாதத்தின் தூண்டுதலினாலும் வீறு கொண்ட பசித்தீ வரண்டு போன உடலில் உணவை லட்சியம் செய்யாமல் எத்தகைய உணவையும் விரைவில் அடிக்கடி எளிதில் செரிக்கச் செய்துவிடும். அத்துடன் நில்லாமல் உணவு சீரணமானதும் வலிமை பெற்ற பசித்தீக்கு உணவில்லாவிடில் இரத்தம் முதலிய தாதுக்களையும் எரிக்கும். அதனால்தான் உங்களுக்கு உடல் சோர்ந்து வாய் வரண்டு போகிறது.

நன்றாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பதுபோல எளிதில் செரிக்காத எண்ணெய்ப் பசை, குளிர்ச்சியான வீர்யம் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட நீர்த்தோற்றத்தில் உள்ள குடிநீர் வகைகள், எள்ளுடன் கலந்து பக்குவம் செய்யப்பட்ட இறைச்சி மாவினாலும் வெல்லத்தினாலும் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசித்தீயைச் சமப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பால் பாயசம், பயத்தம் பருப்பு, நெய் இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த சாதம், நெய்யில் பக்குவம் செய்த தின்பண்டங்கள், நிலையாக நிற்கும் தண்ணீரில் வாழும் மீன் போன்ற பிராணிகளுடைய இறைச்சிகள், கொழுத்த செம்மறியாட்டின் மாமிசம் முதலியவற்றையும் மிகுதியான பசித்தீயைத் தணிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

1 டம்ளர் (சுமார் 250 கிராம்) பச்சரிசியில், 6 டம்ளர் தண்ணீர் விட்டு, சாதம் வெந்தவுடன் வடிகட்டி, அந்தக் கஞ்சியில், 5 கிராம் தேன் மெழுகு கலந்து உணவாகப் பருகலாம்.

1 டம்ளர் கோதுமையை வறுத்து மாவரைத்து நெய் கலந்து, சுமார் 4 - 5 டம்ளர் தண்ணீர் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி மதிய உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகப் பருக மிக நல்லது.

அரை டம்ளர் எள்ளு, அரை டம்ளர் உளுந்து முதலியவற்றை நன்றாக அரைத்துச் சுடுநீர் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாக்கிப் பக்குவம் செய்து உட்கொள்ளச் செய்தால் வீறு கொண்ட பசித்தீ மென்மையடையும்.

எண்ணெய்ப் பசையுள்ள மாமிச சூப்பைப் பருகுவது, நெய்யில் தேன் மெழுகு கலந்து குளிர்ந்த நீரும் கலந்து பருகுதல், கோதுமை மாவை நெய்யும் அல்லது பாலும் கலந்து உண்பது முதலியன நல்லது.

நெய், மாமிசத்திலுள்ள எண்ணெய்ப் பகுதி, எலும்புக்குள்ளிருக்கும் மஜ்ஜை இம்மூன்று வகை எண்ணெய்களையும் கோதுமை மாவுடன் கலந்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட, பசித்தீ அடங்கும். இதைச் சாப்பிட்ட பிறகு, பகலில் படுத்துத் தூங்குவது நல்லது.

இவ்வாறு கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் குறைந்துபோன கபம் வளரும். சீற்றமாயிருந்த பித்தமும் தணியும். வாதம் இயற்கை நிலையை அடையும். சடராக்கினி எனும் பசித்தீ சமநிலையை அடையும். தாதுக்கள் இயற்கைநிலையில் இருக்கும். சமநிலையிலுள்ள அக்கினி உணவைச் சரியாகப் பக்குவம் செய்து உடல் வளர்ச்சி ஆயுள் வலிமை இவற்றை வளர்க்கிறது.

மிருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், அமிருத ப்ராசம் கிருதம், ப்ருகத்சாகலாதிகிருதம், சங்கபஸ்மம், ஹிங்குல பஸ்மம், அப்ரக பஸ்மம், விதார்தியாதி லேஹ்யம், திகார்ஷாதி கஷாயம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயைச் சாந்தப்படுத்தும் வீர்யம் கொண்டவை. உங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகி, எது தங்களுக்குப் பொருந்துமோ அதை அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டு உபாதையிலிருந்து விடுபடலாம்.
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 17: கடக ராசி - முருக்கன்; சிம்ம ராசி - பாதிரி


நண்டு வடிவில் வானத்தில் நட்சத்திரக் கூட்டம் காணப்படுகிறது. இதற்கு கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கடக ராசி மண்டலத்தின் கதிர்வீச்சுகள் மார்பகம் மற்றும் நெஞ்சு பகுதியில் உள்ள உள் உறுப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் கெட்ட கதிர்வீச்சுகள் நுரையீரல், இதயம், மார்பக மற்றும் நெஞ்சு எலும்புகளைப் பாதிக்கக்கூடும். பஞ்ச பூதங்களில் இது நீருடன் தொடர்பு கொண்டது. இந்த ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு நிலைமாறும் குணங்கள் இருக்கும். திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கும் ஜூன் 21 ந்தேதி முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்களுக்கும் ஏற்ற மரம் முருக்கன் மரமாகும். இம்மரத்தை இவர்கள் அரைமணி நேரம் கட்டிப்பிடித்தால் அல்லது நிழலில் உட்கார்ந்தால் சந்திர கிரக தோஷமும், கடக ராசி நட்சத்திரங்களின் தோஷமும் நீங்கும்.

இந்தக் கிரகங்களினால் ஏற்பட்ட நோய்களும் குணம் பெறும் இதைப் பற்றி கடந்த இதழ்களில் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள முருக்கன் மரத்தைப் பற்றிக் கட்டுரை எண் 5 இல் சொல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் விபரங்களுக்கு அதையும் பார்க்கலாம்.

இவ்விதழில் சிம்மராசிக்காரர்களுக்குப் பயன்தரும் பாதிரி மரத்தைப் பற்றியும் பார்ப்போம்.

சிம்ம ராசி - பாதிரி மரம்

ஒரு மனிதனின் உடல் அமைப்பு, மனநிலை, பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்கள் பிறந்த நேரம், காலம் அப்போது ஆட்சியில் இருக்கும் கிரகம், நட்சத்திரங்களைப் பொறுத்துத்தான் அமைகிறது என வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. சூரிய கிரகம், சிம்ம ராசி, ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை பிறந்தவர்கள் மகம் நட்சத்திரம், பூரம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இயற்கையாகவே நிலையான குணம் உடையவர்களாகவும், பிள்ளைகள் மீது அளவில்லாத பாசம் இருப்பவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசி, நட்சத்திரமானது பஞ்சபூதங்களில் நெருப்புடன் தொடர்புடையது.

சிம்மராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின், கெட்ட கதிர்வீச்சுகளால் பலவகையான நோய்கள் உண்டாகின்றன. அதற்குக் கிரக தோஷம், இராகு தோஷம் என்பார்கள். இதனைத் தடுக்கவும், தோஷத்தால் உண்டான நோய்களைக் குணப்படுத்தவும் பாதிரி மரம் பயன் அளிக்கிறது.

இம்மரத்துக்கு ஆங்கிலத்தில் Stereospermum suavelons d.c., PAADARIA எனவும் அழைப்பார்கள். இந்து முனிவர்கள், ஜெயின் தீர்த்தங்கரர்கள், சாதுக்கள் இம்மரத்தின் அடியில் தவம் இருந்து ஞானம் பெற்றுள்ளனர். பெருமளவு மின்காந்த சக்தி இம்மரத்தின் ஒருபகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இவை, இயற்கையான சக்திகளை மனிதனுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மரம் பெண்களை மயக்க வைக்கும் பூக்களைத் தருகிறது. பெண்களை வசியப்படுத்த இதைப் போலிச் சாமியார்கள், மந்திரவாதிகள் பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.

இம்மரத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12 வகையான நறுமணம் கொண்ட பூக்கள் மலருவது விசேஷமான செய்தியாகும்.

இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் உஷ்ணம் நீங்கும்.

பூக்களை அரைத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மேக நோய், விக்கல் குணம் பெறும்.

வேரை உலரவைத்துப் பவுடராக்கிச் சாப்பிட்டால் சர்க்கரைப் புண், மூலம் குணம் பெறும்.

ஒரு பங்கு மரப்பட்டை, 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து அதனை 15 முதல் 30 மில்லி வரை, தினசரி 2 வேளை குடித்தால் இரத்த சோகை, இருமல், வயிற்றுவலி குணம் பெறும்.

இம்மரத்தின் பூக்கள், பட்டை, வேர், இலைகள் என அனைத்தும் சிறுநீரக நோய்க்கு நல்ல மருந்து எனக் கூறப்பட்டுள்ளது.

2 பங்கு மரப்பட்டையை 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து 15 மில்லி அளவிற்கு தினசரி 2 முறை குடித்தால் இரத்த சோகை அதாவது ஹீமோகுளோபின் உற்பத்தி தடைபடுவதைக் குணமாக்குகிறது.

முருக்கன் மரம், பாதிரி மரம் ஆகியவற்றை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் காணலாம்.