Sunday, May 31, 2009
Sunday, May 10, 2009
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் : அரச மரம்
*தர்ப்பைப் புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
*உடலில் தாய்ப்பாலை அதிக அளவு சுரக்கச் செய்கிறது.
*சிறுநீரை அதிக அளவில் பெருக்கச் செய்கிறது.
*பாம்புக்கடி விஷத்தை அகற்றுகிறது.
*வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை நீக்கிச் சுத்தம் செய்கிறது.
*சிறுநீரகக் கற்களைச் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.
*உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
*ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.கேது கிரகம் 12 ராசிகளுக்கும் உரியது. முக்கியமாக மீனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. அஸ்வினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்களுக்கும் தர்ப்பைப் புல் பயன்தரும் முக்கியத் தாவரமாகத் திகழ்கிறது.கேது கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகள், முக்கியமாக கால் பாதங்களைப் பாதிக்கக் கூடியவை. கேது கிரக நேரத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான ஒரு குணமில்லாமல் இரண்டு குணங்கள் இருக்கும். அனைவருடனும் பகைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். இந்தக் கிரகத்தின் தோஷத்தைப் போக்க தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்தலாம்.தர்ப்பப் புல் வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.(தொடரும்)
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 11: அருகம்புல் - ராகு கிரகம்
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 8 : அரச மரம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
First Published : 10 May 2009 02:44:36 PM IST
வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.
தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.
தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.
இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.
வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.
உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.
மருத்துவ குணங்கள்
இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.
இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.
ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.
மரப்பட்டை: இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.
பட்டைச்சாறு: இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.
"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.
(தொடரும்)
டாக்டர் ஹகீம் எஸ்.அக்பர் கவுஸர்
மருத்துவ குணம்;அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இலை:அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.
பட்டை:அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.
பழம்:நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.இம்மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.(தொடரும்)
Sunday, April 26, 2009
நோய் தீர்க்கும் ராசி மரங்கள்
கருங்காலி மரம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
நன்றி தினமணி கதிர்
Saturday, April 25, 2009
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
நன்றி தினமணி கதிர்
மனித உடல் ரகசியம்
இனிப்பு, நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சியான உணவு, பகல்தூக்கம், பசி மந்தித்தல், காலை நேரம், உடல் உழைப்பின்றி ஸுகமாயிருப்பது, உணவு சாப்பிட்டவுடனும் கப தோஷம் அதிகரிக்கின்றது.
இம்மூன்று தோஷங்களின் சமமான அளவை எவர் ஒருவர் சிறந்த உணவால், செயலால் பெறுகிறாரோ அவரே ஆரோக்யமானவர். அறுசுவை உணவில் சுவையே தோஷங்களின் ஏற்றக் குறைச்சலை செய்கின்றன.
1. இனிப்பு, புளிப்பு உப்புச் சுவை - வாதத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.
2. காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை - கபத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.
3. துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை - பித்தத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.
4. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை - கபத்தை அதிகரிக்கும்
5. காரம், கசப்பு துவர்ப்புச் சுவை - வாதத்தை அதிகரிக்கும்
6. புளிப்பு, காரம், உப்புச் சுவை - பித்தத்தை அதிகரிக்கும்
ஆக அறுசுவை உணவு வகைகளையும் சரியான அளவில் உணவில் சேர்ப்பவருக்குத்தான் ஆரோக்யம் புலப்படும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பழுதான சிறுநீரகமா? பயம் வேண்டாம்!
எஸ்.அனந்தராமன்,
சென்னை - 40.
உங்களுடைய நீண்ட கடிதத்தில் உங்கள் வயது 35 என்றும், ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறுவயதிலேயே கருப்பை நீக்கமும், அடுத்ததாக ஓர் ஆண் வாரிசை நீங்கள் எதிர்பார்த்திருந்து அது கிடைக்காமற் போன ஏமாற்றத்தாலும், இனி கருவைச் சுமக்க இயலாது என்ற மனவருத்தமும் சேர்ந்து உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நன்றாகத் தெளிவாகிறது. உறவினர்களிடம் இருந்தும் மன வருத்தம் ஏற்படும்படியாகப் பேச்சுகளை இவ்விஷயத்தில் நீங்கள் கேட்டிருந்தாலும், ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையும் அவர்களைப் பார்த்தால் வெறுப்பும் ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மையும் தங்களுக்கு நேர்ந்திருந்தால் மனம் மேலும் மேலும் பலவீனமடைந்து நீங்கள் குறிப்பிடும் மன உபாதைகள் அனைத்தும் தோன்றக் கூடும்.இறைவன் உங்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தையைக் கொடுத்துள்ளார். குழந்தையே பிறக்காதா என்று பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் உங்களுக்குக் கிடைத்துள்ள அன்பான சுட்டியான பெண்ணை அரவணைப்புடன் வளர்த்து நன்றாகப் படிக்க வைத்து அவளுடைய வருங்கால வளமான வாழ்விற்காக நீங்கள் திட்டமிடலாம்.மனிதர்கள் எதை அடக்கக் கூடாது, எதை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இயற்கை உந்துதல்களாகிய வாயு, மலம், சிறுநீர், தும்மல், தண்ணீர் தாகம், பசி, தூக்கம், இருமல், வேகநடை அல்லது ஓட்டத்தினால் ஏற்படும் பெருமூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதோ, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதோ கூடாது என்கிறது. அவற்றை அடக்குவதால் ஏற்படும் நோய்களும், அதற்கான சிகிச்சை முறைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இம்மையிலும், மறுமையிலும் நன்மையை விரும்புகிறவர், எப்போதும் புலன் அடக்கத்தோடு இருந்து கொண்டு, பேராசை, பொறாமை, பகைமை, குரோதம், வஞ்சனை, துரோகம் நினைத்தல் முதலிய மனதைச் சார்ந்த உந்துதல்களை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் உபதேசிக்கிறது.மனம் சார்ந்த இவற்றைப் பலரும் உங்களிடம் காட்டியிருக்கக் கூடும். அதனால் நீங்கள் வருத்தம் ஏதும் கொள்ளாமல் கணவர், குழந்தை, உறவினர்களுடன் சகஜமாகவும் அன்புடனும் பழகி வருவதே சிறந்தது.உடல் எடை குறைய தேன் கலந்த குளிர்ந்த நீரை காலை இரவு உணவிற்குப் பிறகு அருந்தவும். முட்டி வீக்கம், வலி நீங்க சதகுப்பையை புளித்த மோருடன் அரைத்து, லேசாகச் சூடாக்கி காலை இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக இரண்டு முட்டியிலும் பற்று இடவும்.மனதை வலுப்படுத்த மானஸமித்ரம் எனும் ஒரு குளிகையைக் காலை மாலை சிறிது பாலுடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மனம் அமைதியாக இருக்கத் தலையில் பிரம்மீதைலம் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.12 அங்குலம் மேலிருந்து சட்டியில் துளையிட்டு அதன் மூலம் நெற்றி, தலை, நெற்றிப் பொட்டு ஆகிய பகுதிகளில் பிரம்மீ தைலத்தை நோயாளி படுத்த நிலையில் ஊற்றச் செய்வது மனம் சார்ந்த உபாதைகளுக்கு நல்ல சிகிச்சை முறையாகும்.மனதை அமைதியுறச் செய்யும் மருந்துகள் பல இருந்தாலும் நோயாளிக்கு நோயாளி அது மாறுபடும். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் பொதுவான மருந்துகள் என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதில் தவறேதுமில்லை.
நன்றி தினமணி கதிர்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
மனிதர்களுடைய மூளைப் பகுதியை ‘பிராணன்' என்ற வாயுவும், ‘தர்ப்பகம்' என்ற கபமும் தம் செயல்களின் மூலம் அறிவு, புலன்கள், நாடிகள் எனப்படும் நரம்பு மண்டலங்கள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கின்றன. இந்த இரு தோஷங்களின் சீற்றம், மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரவக் கசிவுகளையும் பாதிப்படையும் வகையில் தாக்குவதால், உடல் அசைவுகள் மந்தமாகுதல், விரைப்பு, தன்னிச்சையாக கைகள் நடுங்குதல், கைகளில் வலுவற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும் முகத்தைச் சார்ந்த தசைகள் அசைவற்று, கண்களை மூட முடியாமல், வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்கும் உபாதைகளும் காணத் தொடங்கும். நடக்கும்போது உடல் முன்னோக்கி வளைவதும், குறுகிய தள்ளாட்டத்துடன் கூடிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்குத் தரையில் ஒரு குச்சி அல்லது கம்பு ஒன்றைப் போட்டுத் தாண்டச் சொன்னால், அதைத் தாண்டியவுடன் நடை சீராக, தடுமாற்றம் குறைந்து சிறிது தூரம் வேகமாகவும் நடப்பார்கள். வாதத்திற்கும் கபத்திற்கும் சமமான குணம் ‘சீதம்' எனப்படும் குளிர்ச்சி மட்டும்தான். மற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேராதவை. அதனால் குளிர்ச்சி எனும் குணத்தைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் பருவ காலத்தினாலும் இந்த நோயின் தாக்கம் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல்,. அப்படி குளித்தபிறகு தலையைச் சரியாக துடைத்துக் கொள்ளாமல் தலைமுடியை வாரிக் கொள்ளுதல், தேங்காய் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டு, காலையில் இளம் வெயில் அல்லது விடிகாலையில் நடைப்பயிற்சி செய்தல், தூங்கும்போது அதிக அளவில் ஏசியை வைத்துக் கொள்ளுதல், தலைப்பகுதியில் டேபிள் மின்விசிறியின் காற்று படும்படி படுத்துக் கொள்ளுதல், இரவில் படுக்கும் முன் குளிர்ந்த நீரைப் பருகுதல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சில்லிட்டுப் போன பழங்கள், பழ ரசங்கள், பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்து அடிக்கடி சாப்பிடுதல், சில்லிட்டுள்ள தரையில் கால் பாதங்களை வைத்திருத்தல், உடல் வியர்த்துள்ள நிலையில், ஐஸ் தண்ணீரைப் பருகுதல், உணவில் குளிர்ச்சியான வீர்யத்தைக் கொண்ட வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுதல், தவறான விதத்தில் யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்ற சில காரணங்களால் தலையைச் சார்ந்த வாத - கப தோஷங்கள் சீற்றமடைந்து நரம்புகளை வலுவிழக்கச் செய்கின்றன.இந்நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் பல உள்ளன. மூக்கினுள் மூலிகைத் தைலத்தை விடுதல், காதுகளில் எண்ணெய் நிரப்புதல், முகத்தில் மூலிகைத் தைலத்தைத் தடவி, பூண்டு வேகவைத்த சூடான பாலிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்தல், தலையில் எண்ணைய்யை நிரப்பி ஊறவிடுதல், குடலுக்கு நெய்ப்புத் தரும் விளக்கெண்ணெயைப் பருகச் செய்து மலம் கழிக்க வைத்து அதன் பிறகு ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களைச் செலுத்தி குடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுதல், உடல் சுத்தி முறைகள் அனைத்தையும் செய்த பிறகு, மூளைத் திசுக்கள், நரம்புகள் வலுப்படும் வகையில் மூலிகைக் கஷாயங்களைப் பாலுடன் கலந்து பருகுதல் போன்றவை சிகிச்சை முறைகளாகும்.விதார்யாதி கிருதம், தசமூல ரசாயனம், அஸ்வகந்தாரிஷ்டம், தலைக்கு க்ஷீரபலா தைலம் போன்ற சிறப்பான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக, பார்கின்ஸானிஸம் எனும் கடுமையான உடல் உபாதையின் தாக்கத்தை நன்றாகக் குறைக்க முடியும்.
(தொடரும்)
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "பிளீச்' செய்யாமல் "பளிச்' முகம்!
பெண்களுக்கு முகம் மற்றும் உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க சில எளிய விஷயங்களை ஆயுர்வேதம் கூறுகிறது.
* அகில் கட்டையை நன்றாகத் தூளாக்கி தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீரில் குழைத்து தேவையற்ற ரோம வளர்ச்சிப் பகுதிகளில் தேய்த்து, சிறிது ஊறிய பிறகு கழுவி வர அவை உதிர்வதுடன் மேனி அழகு கூடும்.ஊ கட்டை சந்தனத்தை இழைத்து அதில் குங்குமப் பூ மற்றும் சிறுநாகப் பூ பொடித்துச் சேர்த்துப் பூசி, சிறிது ஊறிய பிறகு அலம்பி விட, தேவையில்லாத மீசை, கிருதா போன்ற முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும்.
* புங்கம் விதை, பச்சிலை, வாஸனக்கோஷ்டம் ஆகியவற்றைப் பொடித்து குளிர்ந்த நீரில் கரைத்து முகம் மற்றும் உடலில் பூசிக் குளிக்க, முடிகள் தேவையில்லாத பகுதிகளிலிருந்து உதிர்வதுடன் உடலிலிருந்து கெட்ட மணமும் அகலும்.
* நலங்குமாவு எனப்படும் பாசிப் பயறு, வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, கார்போக அரிசி, பூலாங்கிழங்கு இவை அனைத்தையும் ஒரே அளவில் சேர்த்து இடித்த தூளை தயிர்த் தெளிவுடன் பூசிக் குளிக்க, தேவையற்ற முடிகள் உதிர்வதுடன் நல்ல மணத்தை உடலுக்குத் தரக்கூடியதாகும்.
* வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* கடுக்காய், மாம்பருப்பு, லவங்கப் பத்திரி, ஜடாமஞ்சி, நாவல் இலை, வாசனைக்கோஷ்டம், நெல்லிமுள்ளி, கோரைக் கிழங்கு ஆகியவற்றைப் பொடித்து தண்ணீரில் கலந்து உடலெங்கும் பூசிக் குளிக்க முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் முடிகள் உதிர்ந்து உடலில் மணமும் அழகும் கூடும்.
* மஞ்சிட்டி, லோத்திரப்பட்டை, ஆலம் விழுது, வாசனைக் கோஷ்டம், மஸýரப்பருப்பு, தினைமாவு, செஞ்சந்தனம் ஆகியவற்றைப் பொடித்து தண்ணீருடன் கலந்து முகத்தில் பூசி சிறிது ஊறிக் கழுவி வர, ரோம வளர்ச்சி நீங்குவதுடன் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* மாதுளம்பட்டை, வேப்பம்பட்டை, ஏழிலம்பாலைப் பட்டை, லோத்திரப்பட்டை, கடுக்காய்த்தோல் ஆகியவற்றை நன்றாகப் பொடித்துத் துணியால் சலித்து சந்தனத்தூள் மற்றும் ஃபேஸ் பவுடருடன் கலந்து பூசி வர, பெண்களின் உடல்நாற்றம் நீங்கி தேவையற்ற முடியும் உதிரத் தொடங்கும்.
* மஞ்சிட்டி, பூங்காவி, மஞ்சள், மரமஞ்சள், கடுகு, பொடித்துத் தூளாக்கி, ஆட்டுப் பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து முகம் கழுவி வர முகம் களையுடன் அழகாகவும் தேவையற்ற ரோமங்களையும் நீக்கிவிடும்.
* ஆண்கள் முகம் அழகாக இருக்க மஸுரப் பருப்பை பால் விட்டரைத்து முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவ முகம் சிவந்து வனப்புடன் காணும்.
* தினமும் கடுகெண்ணையை மாலையில் முகத்தில் தடவித் தேய்த்துக் குளிக்க முகம் மென்மையும் மழமழப்பும் பெறும்.
* மிளகு, கோரோசனை இரண்டையும் அரைத்துப் பூச ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* அதிமதுரம், லோத்திரப்பட்டையுடன் அவை அரிசியைப் பொடித்துச் செய்யப்பட்ட மென்மையானவற்றைக் கலந்து குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் பூசி 2 - 3 மணி நேரம் ஊற வைத்து அலம்பிவிட முகம் அழகாக மாறும். ஆண்மையைப் போற்றும் அஸ்வகந்தாதி லேஹ்யம், சித்த மகரத்துவஜம், அமுக்கரா சூரணம் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் ஆண்களுக்குத் திரண்ட உருண்ட வலுவான அகன்ற தோள்கள் அமையும். பெண்மையை வளர்க்கும் அசோககிருதம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்றவை மென்மையும் வனப்பையும் அழகையும் பெண்களுக்குத் தருபவை. செயற்கை முறைகளைத் தவிர்த்து இயற்கை நமக்களித்துள்ள இவற்றைப் பயன்படுத்தி அழகாக, மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாதகபம் நீங்க...
நே.சம்பத், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரியாங்குப்பம்.
பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.
இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.
கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும். பெருங்காயத்திலுள்ள "ஓலியோ ரெஸின்' மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.
பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.
கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.
ஸþம்ருத சம்ஹிதை எனும் நூல், பெருங்காயத்தைப் பற்றி மேலும் சில வர்ணனைகளைச் சேர்க்கிறது. சுவை மற்றும் ஜீரண இறுதியில் காரமானது, எளிதில் செரித்துவிடும். தீபனம் (பசித்தீயைத் தூண்டிவிடும்), ஸ்நிக்தம்(உடல் உட்புற நெய்ப்பைத் தரும்), ஸரம் (மலக்கட்டை உடைத்து மலத்தை வெளியேற்றும்).
சரகஸம்ஹிதை வாதகபாபஹம் என்கிறது. அதாவது வாதகபநோய்களை நீக்குகிறது. பெருங்காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதில் விட காது வலி தீரும். இத்துடன் உளுந்து சேர்த்துத் தணலிலிட்டுப் புகைத்து அந்தப் புகையை உள்ளிழுக்க வயிற்று உப்புசத்துடன் ஏற்படும் மூச்சிரைப்பு மற்றும் இருமல் தணியும். பெருங்காயத்தைத் தண்ணீர் விட்டரைத்து மேல்பூசிச் சூடு காட்ட தேள்கடி வேதனை குறையும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)
Saturday, August 2, 2008
சிறுநீர் வழி பகுதியில் ஏற்படும் நோய்கள

சிறுநீர் வழி பகுதியில் ஏற்படும் நோய்கள் பற்றி நான் படித்த விவரங்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
சிறுநீரகங்களில் ஏற்படும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை பற்றிய ஓர் அறிமுகமாகவும், வருமுன் காப்போம் என்ற எண்ணத்தினால், இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
சிறுநீர்வழி பகுதியில் நான்கு உறுப்புகள் உள்ளன.
1. சிறுநீரகங்கள் (கிட்னி)
2. சிறுநீர்க்குழாய்கள் (யூரிட்டர்)
3. சிறுநீர்ப்பை (பிளேடர்)
4. சிறுநீர்ப்புறவழி (யூர்ரித்துரு)
பொதுவாகச் சொல்வாதனால் சிறுநீரகங்கள் சிறுநீரைச் சுரக்கச் செய்து சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு அனுப்பி, அதை நிரப்பச் செய்த பிறகு, சிறுநீர்ப்புறவழி வழியாக சிறுநீர் வெளியேறுகிறது. இயல்புக்கு மாறாக செயல்படும் நிலையில் ஆபத்தான் விளைவுகளை உடனே உண்டாக்கும்.
சிறுநீரகங்கள் (கிட்னி)
சிறுநீரகங்கள் (கிட்னி) மனிதனுக்கு இரண்டு உண்டு. வயிற்றின் உறுப்புகளுக்குப் பின்புறம் மேற்பகுதியில் தண்டுவடத்திற்கு இருபுறமும் ஒன்று வீதம் உள்ளது. அது அவரை விதை வடிவத்தில் காணப்படும். வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்தை விட சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும், 10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 86.5 செ.மீ. அகலமும் கொண்டது. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது.
சிறுநீரகம் இரண்டு செயல்களைச் செய்கிறது. ஒன்று இரத்தத்திலிருக்கும் கழிவுகளைத் தூய்மைப்படுதி நீக்குகிறது. இரண்டாவதாக உடலிலுள்ள நீரையும், உப்பையும் ஒழுங்குப் படுத்துகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ஒரு லிட்டருக்கு மேல் இரத்தம் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. இதில் சிறு பகுதி மட்டுமே தூய்மைப்படுதப்படுகிறது.
Sunday, July 27, 2008
மந்தை புத்தி
நான் படித்த கலைக்கதிர் அறிவியல் மாத இதழ் செப்டம்பர் 2007-ல் படித்த முக்கியமான, தற்போது சோதனையில் உள்ள ஒரு செயலை பற்றியது இக்கட்டுரை- மந்தை புத்தி .
தலைவர், பொறுப்பாளர், வழிகாட்டி என்று யாருமில்லை. படை உண்டு தளபதியில்லை வேலையாட்கள் உண்டு ஆனால் மேலாளர் இல்லை. இருப்பினும் அரைமில்லியன் பூச்சிகள் யாருடைய தலைமையும் வழி காட்டுதலும் கட்டளையும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்படுகின்றன. எப்படி? என்பது தான் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவு உங்களுக்காக சில பகுதிகள்........
"தனி ஒரு எறும்பு ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் 'திரு திரு' என்று விழிக்கும் தனி எறும்பின் 'சாமர்த்தியம்' எத்தனை பரிதாபமானது என்பதை தனியாக நிறுத்திப்பார்த்தர்ல் தெரியும் என்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்து பெண் அறிஞர் டெபொரா கோர்டான் சொல்லுகிறார்.
"எறும்புக்கு விவரம் பத்தாது ஆனால் எறும்புக் கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லை" 140 மில்லியன் ஆண்டுகளாகப் போராடி 12,000 வகை எறும்பு சிற்றினங்கள் வளர்த்துக் கொண்ட அறிவு தான் "மந்தை புத்தி". மந்த புத்தியல்ல. தனி ஒரு எறும்பினால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒரு மாபெரும் சாதனையை ஒரு எறும்புக் கூட்டம் எளிதில் சாரித்துவிடும். தீனி இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதுடன் அதற்கான மிக சீக்கிரமான குறுக்கு வழியைக் கண்டு பிடிப்பதிலும், கூட்டத்தைப் பிரித்து வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் நிர்வாகத் திறமையிலும் பக்கத்து புற்றிலிருக்கும் கூட்டத்துடன் வேட்டைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் ராஜ தந்திரத்திலும், தனி ஒரு எறும்பு 'மண்டு' ஆனால் கூட்டமாக செயல்படும்போது அதன் வேகம், விவேகம் இரண்டுமே அசாத்தியம். இதை கோர்டான் அவர்கள் 'ஸ்வார்ம் இன்டேல்லிஜென்ஸ்' மந்தை புத்தி என்றழைக்கிறார்.
தனியாக ஏதும் செய்ய திறமையில்லாத பூச்சிகளும் பறவைகளும் கூட்டமாக இருக்கும்போது படுசுட்டியாக இருப்பது எப்படி? எங்கிருந்து அந்த அறிவு பிறக்கிறது. பல முட்டாள்கள் ஒன்று கூடி பெரிய சாதனை எதையும் படைக்க முடியாது. ஆயிரம் பூச்சியங்களைக் (0) கூட்டினால் கிடைப்பதும் பூச்சியம் தான் அப்படியிருக்க மந்தையிலிருது புத்திசாலித்தனம் எப்படி உருவாகமுடியும்?
எல்லா உறுப்பினர்களும் இணைந்து வழங்கும் சிறு சிறு செய்கைகள் ஒன்றுகூடிடும் போது அது மாபெரும் சாதனையாகி விடுகிறது.
அடுத்து கட்டவேண்டிய புதிய தேன் கூட்டினை எந்த இடத்தில் கட்டினால் நல்லது என்று இடம் தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்தை தேனீக்கள் எப்படி அடைகின்றன? ஆயிரக்கணக்கான நெத்திலி மீன்கள் ஒரே மனதாக திடீரென்று மின்னல் வேகத்தில் திசைமாறி கூட்டம் கலைந்து போகாமல் ஒரு பெரிய வெள்ளி பூதம் திரும்புவது போல திரும்புகின்றனவே! என்ன நடக்கிறது என்பதை தனித்தனியாக அவை அறியமலிருந்த போதிலும் கூட்டத்தின் ஒருமித்த வெற்றிக்கு அவை அடிகோலுகின்றன! உயிரியலில் மாபெரும் சிந்தனையாளர்களும் சாதனைகளைப் படைத்தவர்களும் கூட மந்தை அறிவைக் கண்டுவியந்து போகிறார்கள். அண்மைக் கால ஆய்வுகள் மூலம் மந்தை அறிவின் சூட்சுமங்கள் வெளிப்பட ஆரம்பித்திருகின்றன.
எறும்புக்கூட்டமாகட்டும், தேனீக்களின் கூட்டமாகட்டும் இரண்டிலும் தலைவர், பொறுப்பாளர், வழிகாட்டி என்று யாருமில்லை. படை உண்டு தளபதியில்லை வேலையாட்கள் உண்டு ஆனால் மேலாளர் இல்லை. இருப்பினும் அரைமில்லியன் பூச்சிகள் யாருடைய தலைமையும் வழி காட்டுதலும் கட்டளையும் இல்லாமல் வெற்றிகரமாக செயல்படுகின்றன.