Saturday, August 2, 2008

சிறுநீர் வழி பகுதியில் ஏற்படும் நோய்கள


சிறுநீர் வழி பகுதியில் ஏற்படும் நோய்கள் பற்றி நான் படித்த விவரங்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிறுநீரகங்களில் ஏற்படும் நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை பற்றிய ஓர் அறிமுகமாகவும், வருமுன் காப்போம் என்ற எண்ணத்தினால், இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

சிறுநீர்வழி பகுதியில் நான்கு உறுப்புகள் உள்ளன.

1. சிறுநீரகங்கள் (கிட்னி)

2. சிறுநீர்க்குழாய்கள் (யூரிட்டர்)

3. சிறுநீர்ப்பை (பிளேடர்)

4. சிறுநீர்ப்புறவழி (யூர்ரித்துரு)

பொதுவாகச் சொல்வாதனால் சிறுநீரகங்கள் சிறுநீரைச் சுரக்கச் செய்து சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு அனுப்பி, அதை நிரப்பச் செய்த பிறகு, சிறுநீர்ப்புறவழி வழியாக சிறுநீர் வெளியேறுகிறது. இயல்புக்கு மாறாக செயல்படும் நிலையில் ஆபத்தான் விளைவுகளை உடனே உண்டாக்கும்.

சிறுநீரகங்கள் (கிட்னி)

சிறுநீரகங்கள் (கிட்னி) மனிதனுக்கு இரண்டு உண்டு. வயிற்றின் உறுப்புகளுக்குப் பின்புறம் மேற்பகுதியில் தண்டுவடத்திற்கு இருபுறமும் ஒன்று வீதம் உள்ளது. அது அவரை விதை வடிவத்தில் காணப்படும். வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்தை விட சற்று சிறியதாகவும், கீழேயும் உள்ளது. ஒரு சிறுநீரகம் சுமார் 180 கிராம் எடையும், 10 முதல் 12.5 செ.மீ. நிளமும் 86.5 செ.மீ. அகலமும் கொண்டது. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்களைக் கொண்டது.

சிறுநீரகம் இரண்டு செயல்களைச் செய்கிறது. ஒன்று இரத்தத்திலிருக்கும் கழிவுகளைத் தூய்மைப்படுதி நீக்குகிறது. இரண்டாவதாக உடலிலுள்ள நீரையும், உப்பையும் ஒழுங்குப் படுத்துகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ஒரு லிட்டருக்கு மேல் இரத்தம் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. இதில் சிறு பகுதி மட்டுமே தூய்மைப்படுதப்படுகிறது.