Monday, October 4, 2010

இதயம்

இதயத்தைத் தமரகம் என்ற சொல்லால் தமிழ் மருத்துவ  நூல் குறிப்பிடுகிறது.

மனம் என்பது இதயமா?  மூளையா?  என்றால் மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு இதயம்.


இதய வலுவிற்குச் சில மருத்துவக் குறிப்புகள்

அன்னாசிப் பழத்தை மேல் தோல் சீவிக் கறுக்குவாட்டில் வட்டங்களாய் நறுக்கி அதன் மேல் சீனி  துா வி ஒரு பாத்திரத்தில்  நான்கு மணி நேரத்திற்கு மேல் வைத்திருங்கள்.  இதனை நீரிழிவு நோய் இல்லாதவர்கள் காலையில் மட்டும் பருகிவர இதயம் பலமாகும்.

மருதமரங்கள் உள்ள சாலையில்  அந்தக் காற்றில் நடந்தாலே மாரடைப்பு வராது என்பார்கள்.

உபவாசம்

உபவாசம் மற்றும் உண்ணா விரதம் என்ற இரண்டுமே பட்டினியாக இருப்பதைத்தான் குறிக்கிறது. 

மனிதனுக்கு எப்படி உணவு தேவையோ அதே போல் உண்ணா நோன்பும் தேவை. 
பல மருத்துவா்களால் கொடுக்கப்பட்ட  பல மருந்துகளால் குணமடையாத நோய்கள் உண்ணாநோன்பினால் குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உண்மையான பசி எடுக்க தொடங்கிவிட்டால் உடலில் தீய பொருள்கள் நீங்கிவிட்டதாகவும் உடல் நல்ல நிலையை அடைந்விட்டதாகவும் கருதி நோன்பை முடிக்க வேண்டும்.