Saturday, November 6, 2010

சிந்திப்போம், விரைந்து செயல்படுவோம்

பஞ்ச பூதங்களில் ஆரம்பத்தில் தோன்றியது ஆகாயம்.  அதன் பிறகு காற்று அடுத்ததாக வெப்பம் வந்தது.  இந்த வரிசையில் நீர் வெளிப்பட்டது.  அதுவரை உயிர்கள் இல்லை.  ஐந்தாவதாக நிலம் வந்த பிறகுதான் நிலைத்த தன்மையுடைய உயிர்கள் தோன்றின.  மண்ணை வணங்குங்கள்.  நல்ல வண்ணம் வாழ முடியும்.  இப்படி சொன்னவர் சட்டை அணியாச் சாமியப்பன், கொங்குகாரர்.


மண்ணைக் கெடுத்தது  நம்முடைய ஆடம்பரம் தான். 

ஏ.சி. மெஷின் இல்லாமல் யாராலும் வாழ முடியவில்லை.  பராவாயில்லை.  ஒரு ஏ.சி. மெஷின் வைத்திரு°நதால் ஒரு பூவரச மரத்தையும் வையுங்கள்.  அரச மர மனங்கள் தான் மேம்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன.  ஆளசியும் நித்திய கல்யாணியும் 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.
எனவே, மழை ஈர்ப்பு மையம் அமைப்பதில் அக்கறையை காட்டுங்கள் என்கிறார் அவர்.

http://www.agriculturetheaxisoftheworld.com/2010/04/alias.html
மரங்களை நாம் இழந்துவிட்டோம் எனில், நாளைய உலகம் படும் துயரத்திற்கு அளவே இல்லை என படித்த  ஞாபகம்.
சிந்திப்போம், விரைந்து செயல்படுவோம்.

No comments: